ராஜேஷ்குமார் ஸார் ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்பு இணையம் செல்பேசி இல்லாத காலத்தில் கொரோனா வந்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்?
சிவக்குமார்
சென்னை
வணக்கம் சார்,
நான் ஷிவானி செல்வம். உங்களிடம் ஒரு கேள்வி சார். போதை பொருளுக்கு அதாவது கொகையின் போன்ற வஸ்துவுக்கு அடிமையான ஒருவருக்கு மேலும் மேலும் கொகையின் கொடுத்து இறுதியில் அவரின் சாம்பலையே கொகைனாக மற்றவர் உபயோகிக்கலாமா சார்?. நேற்று ஒரு நாவலில் இதுபோல் ஒருவரி வாசித்தேன். கூகுளிலும் இதுகுறித்து தேடினேன் அதான் உங்களிடம் கேட்கிறேன் ...